×

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாரம் பாய்ந்து முதியவர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (65). இவர் ஆத்தூரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்தார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதியினர் கூறுகையில், ‘‘மின்வாரிய துறை அதிகாரிகள் கவனக்குறைவால் பழனிசாமி உயிரிழந்தார். எனவே, மாவட்ட நிர்வாகம் உயிரிழந்த விவசாயி பழனிசாமி குடும்பத்தினர்க்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.

The post மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Palaniswami ,Athur Kuppa ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...