×

10 முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் : கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முருகன், திருச்சி- கிருஷ்ணபிரியா, கன்னியாகுமரி – பாலதண்டாயுதபாணி, ஈரோடு -சம்பத், தொடக்க கல்வி த்துறை இணை இயக்குநராக சிவக்குமார், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராக குணசேகரன், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர்களாக குழந்தைராஜன், ராமன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுன இணை இயக்குநராக சரஸ்வதி, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராக சின்னராஜூ ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்ககி நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர்-வளர்மதி, திருநெல்வேலி-முத்துசாமி, திருவள்ளூர்-ரவிச்சந்திரன், செங்கல்பட்டு-கற்பகம், தர்மபுரி-ஜோதிசந்திரா, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநராக- ராஜசேகரன், தஞ்சாவூர் சரபோஜி நூலகம் மற்றும் ஆய்வு நிலையத்தின் நிர்வாக அலுவலராக -கலாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post 10 முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் : கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!