×

அரசு நல திட்டங்களை செயல்படுத்த வரி நிலுவைத்தொகையை சமாதான திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுரை

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் கடலூர் கோட்டங்களை சார்ந்த அதிக வரி செலுத்துவோர் பிரிவு மனிதர்களுக்கான சமாதான திட்டம் 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: அனைத்து வணிகர்களும் சமாதான திட்டம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததால் முதலமைச்சர் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கடந்த 9 ,10, 11 ஆகிய மூன்று நாட்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது. 10ம் தேதி காலையிலேயே சமாதான திட்டத்தை அறிமுகம் செய்து அதனை மாலையிலே நிறைவேற்றி இரண்டு தினங்களுக்குள்ளாகவே ஆளுநரிடம் உத்தரவைப் பெற்று 11ம் தேதியே செயல்முறைக்கு முதலமைச்சர் கொண்டு வந்தார்.

இந்த சமாதான திட்டம் என்பது வணிகர்களுடைய பொற்காலம். சமாதான திட்டம் முதலமைச்சர் அறிவித்திருந்தாலும் அதனை மக்களிடமும் வணிகர்களிடமும் கொண்டு சேர வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் இந்த கூட்டத்தை ஆணையர் கூட்டி உள்ளார். சமாதான திட்டம் மூலம் ரூ.24 ஆயிரத்து 200 கோடி வர வேண்டியதுள்ளது. இதில் குறைந்தது ரூ.5 ஆயிரம் கோடி வரப்பெற்றால் தான் இந்த திட்டம் வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் குறைகளை கேட்பதற்கு இதே கலைவாணர் அரங்கில் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். என்றார்.

The post அரசு நல திட்டங்களை செயல்படுத்த வரி நிலுவைத்தொகையை சமாதான திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,Chennai ,Chennai Kalaivanar Arangam ,Kanchipuram ,Chengalpattu ,Tiruvallur ,Vellore ,Cuddalore ,Minister ,Murthy ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...