டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால். இவர் டெல்லியின் சந்தனி தொகுதி மற்றும் உத்தர பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாக பாஜகவின் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சுனிதா கெஜ்ரிவால் வரும் 18ம் தேதி ஆஜராக வேண்டுமென டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சுனிதா கெஜ்ரிவால், டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி அமித் பன்சால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகிற 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்! appeared first on Dinakaran.
