×

தமிழ்நாட்டில் முதன்முறையாக தட்டான் பூச்சிகள் கணக்கெடுப்பு: புதிதாக கண்டறியப்பட்ட 80 வகையான தட்டான் பூச்சிகள்

உதகை: முதுமலை வனப்பகுதியில் 2 நாட்களாக நடைபெற்ற கணக்கெடுப்பில் 80 வகையான தட்டான் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் கொண்ட வனப்பகுதியாக உள்ளது. இங்கு எண்ணற்ற விலங்குகள் பறவைகள், பூச்சிவகையினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தட்டான் பூச்சிகளை கணக்கெடுக்கும் பணியானது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நடைபெற்றது.

இதில் 80கும் மேற்பட்ட வனத்துறையினருடன் தன்னார்வலர்களும் பங்கேற்றனர். இவர்கள் நீரோடைகளின் அருகில் சிறகடித்து பறந்துகொண்டிருந்த தட்டான் பூச்சிகளை பதிவு செய்தனர். குறிப்பாக பூர்க் ஸ்பிரேட் விங், மலபார் டோரென்ட், கொடகு கிளப் டெய்ல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கே உரித்தான தட்டான் பூச்சி வகையினங்களை கணக்கெடுத்தனர். இந்தியாவிலேயே சுமார் 400 வகையான தட்டான் பூச்சிகளே உள்ள நிலையில் முதுமலை வனப்பகுதியில் மட்டும் 80க்கும் மேற்பட்ட வகையினங்களை கண்டறிந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் முதன்முறையாக தட்டான் பூச்சிகள் கணக்கெடுப்பு: புதிதாக கண்டறியப்பட்ட 80 வகையான தட்டான் பூச்சிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mudumalai Forest ,Mudumalai, Nilgiris district… ,Tamilnadu ,
× RELATED முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு