×

திருமயம் ஊராட்சியில் 11.16 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட பணிகள்

 

திருமயம்,நவ.6: திருமயம் ஊராட்சியில் சுமார் ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தொடக்கப்பள்ளி சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில் அதனை சரி செய்ய பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் சிக்கந்தர் மக்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திருமயம் ஊராட்சி சார்பில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தில் ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.

இதேபோல் திருமயம் பைரவர் கோயில் அருகே உள்ள கடியாபட்டி வளைவு சாலை பகுதியில் மூடியுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்நிலையில் இரு மக்கள் நல பணிகளும் முடிவடைந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நேற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட அவை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம், கணேசன், பொறியாளர் அணி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு சொசைட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டாசு விற்பனை கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்ததார்.அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

The post திருமயம் ஊராட்சியில் 11.16 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirumayam panchayat ,Tirumayam ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதியில்...