×

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

 

கிருஷ்ணகிரி, நவ.5: ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதில், அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியது, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா என பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படக் கண்காட்சியினை 500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

The post அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dorapalli Akraharam ,Osur ,Tamil Nadu government ,Achievement ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்