×

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம்

 

அரூர், நவ.5: வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்யைாக அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் என அரூர் செயற்பொறியாளர் முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மழையாலும், பெருங்காற்றாலும் அல்லது வேறு விதத்திலோ அறுந்த விழுந்த மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். அது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளியுங்கள். மேலும். அவ்வாறு அறுந்த மின்கம்பிகளை தொட்டு எவரேனும் விபத்தில் சிக்கியவரை கைதொட்டு காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். மின் கம்பங்கள் அடியில் பழுதடைந்திருந்தாலோ அல்லது அதிலிருந்து போகும் மின்கம்பிகள் பூமியில் இருந்து 15 அடிக்கு கீழ் தொங்கிக் கொண்டிருந்தாலோ அதன் அருகிலோ அல்லது அதனை கடந்தோ செல்ல வேண்டாம். அதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு(எர்த் பைப்) போடுவதுடன், குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணிகாய வைக்கும் செயலைத் தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும், சுவிட்ச்சுகளை பொருத்த வேண்டாம்.

இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக காங்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Arur ,Executive ,Dinakaran ,
× RELATED அரூர் அருகே மாட்டிறைச்சி...