அரூர், ஜூலை 20: அரூர்-சிந்தல்பாடி சாலையில் கொளகம்பட்டி வனப்பகுதியில் ஏரளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியையொட்டிய கோவிந்தசாமி நகர் பகுதிக்கு மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது வருவது வழக்கம். நேற்று வனப்பகுதியிலிருந்து நகருக்குள் வந்த மானை, நாய்கள் துரத்தியதால், அதிவேகமாக ஓடி வந்த மான், அரூர் கடைவீதியில் உள்ள மசூதிக்குள் நுழைந்தது. மேலும், உள்ளே ஓடியபடி இருந்த மான், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், வலை போட்டு மானை பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
The post நாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்த மான் appeared first on Dinakaran.