×

கணவர் கொலை மிரட்டல் மாஜி அமைச்சர் புகார்

புதுச்சேரி: மாஜி அமைச்சர் சந்திரபிரியங்கா, கணவர் மீது கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் கடந்த 6 மாதமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது பதவி பறிப்பால் மகிழ்ச்சியடைந்த கணவர் சண்முகம், ஸ்டீரீட் டான்ஸ் ஆடிய வீடியோவை இஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், சந்திரபிரியங்கா கடந்த 27ம் தேதி டிஜிபி நிவாசனை நேரில் சந்தித்தார். அப்போது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாய்மொழியாக புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு, அவர், காரைக்கால் சீனியர் எஸ்பி கவுகால் நிதின் ரமேஷூக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது சீனியர் எஸ்பி விடுப்பில் சென்றுள்ளார். இதற்கிடையே விசாரணைக்கு வருமாறு சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட போலீஸ் தரப்பில் புகார் வந்திருப்பது உண்மைதான் விசாரித்து வருகிறோம், என்றனர்.

 

The post கணவர் கொலை மிரட்டல் மாஜி அமைச்சர் புகார் appeared first on Dinakaran.

Tags : Ex ,minister ,Puducherry ,Former minister ,Chandrapriyanka ,Transport Minister ,
× RELATED லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை...