×

காயத்தால் விலகினார் ஹர்திக் பாண்டியா: பிரசித்துக்கு வாய்ப்பு

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (அக். 19) பந்துவீசியபோது கணுக்காலில் காயம் அடைந்தார். முழுமையாகக் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம் என தெரியவந்ததை அடுத்து, உலக கோப்பையில் இருந்து ஹர்திக் விலகியுள்ளார். இது குறித்து X வலைத்தள பக்கத்தில் அவர் பதிந்துள்ள தகவலில், ‘உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டத்தை ஜீரணிக்க முடியவில்லை.

எனினும், அணியுடன் தங்கியிருந்து சக வீரர்களை ஊக்குவிப்பேன். அனைவரது வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா (27 வயது) இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. பிரசித் இதுவரை 17 ஒருநாள் போட்டியில் விளையாடி 29 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

The post காயத்தால் விலகினார் ஹர்திக் பாண்டியா: பிரசித்துக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Hardik Pandya ,Indian ,World Cup Series ,Dinakaran ,
× RELATED நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ...