×

வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் மிசோரம், சட்டீஸ்கரின் 20 தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு


ஐஸ்வால்: வரும் 7ம் தேதி மிசோரம், சட்டீஸ்கரின் 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் இரண்டு கட்டமாகவும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி தொடங்கும் சட்டப் பேரவை தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மிசோரமில் 40 தொகுதிகளிலும், சட்டீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் நாளை மாலை 5 மணியுடன் (நவ. 5) தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மதுப் வியாஸ் கூறுகையில், ‘மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் 1,276 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்’ என்றார். மிசோரம் மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த 2018ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 37.8 சதவீத வாக்குகளைப் பெற்று 26 இடங்களைக் கைப்பற்றியது.

காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதேபோல் சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இந்த தொகுதிகளில் மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 70 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு 958 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். முதல் கட்டமாக நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட வாக்குப்பதிவுக்காக மொத்தம் 5,304 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாேகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்காக காங்கிரஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில், எதிர்கட்சியான பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

The post வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் மிசோரம், சட்டீஸ்கரின் 20 தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : 20th ,Mizoram, Chhattisgarh ,Political Parties Final Vote Collection ,Aiswal ,Dinakaran ,
× RELATED பிரகதீஸ்வரர் கோயில் தேர்திருவிழா...