×

சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த 96 வயதான சுதந்திர போராட்ட வீரர் உத்தம் லால்சிங் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளார். 1983-ல் ஓய்வூதியம் வழங்க பீகார் அரசு, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் 2009 வரை நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017-ல் பீகார் அரசு அனுப்பிய பரிந்துரை தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு கூறியது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது: டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi High Court ,Delhi ,Bihar ,
× RELATED விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது ஒன்றிய அரசு!!