×

மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பலி..!!

மும்பை: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் காணாமல் போன நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவனத்தில் நேற்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இரவு வெடிப்பு ஏற்பட்ட ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாட் எம்ஐடிசியில் உள்ள புளூ ஜெட் ஹெல்த்கேரில் இருந்து மேலும் ஒரு உடலை என்டிஆர்எஃப் மீட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, ரசாயனங்கள் அடங்கிய பீப்பாய்கள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

The post மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Raikat district of ,Marathya state ,MUMBAI ,RAIGAT DISTRICT OF ,MARATHIA STATE ,RAIKAT ,MAHARASHTRA ,Raikat district of Marathya state ,
× RELATED போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா...