×

பசுமை தினத்தன்று நடவு பராமரிக்கப்படாததால் மரக்கன்றுகள் அழியும் அபாயம்

 

ஊட்டி, நவ.4: ஊட்டியில் தேசிய பசுமை தினத்தில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் அவைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.தேசிய பசுமை தினத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த செப் மாதம் 24ம் தேதி பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் நீலகிரி தலைகுந்தா பகுதியில் உள்ள காமராஜர் சாகர் அணையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஆனால் தொடர்ந்து இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் வனத்துறையோ அல்லது மற்ற அரசு துறைகளோ மேற்கொள்ளப்படவில்லை.

பெரும்பாலான பகுதிகளில் உள்ள மரக்கன்றுகள் உடைந்தும், வனவிலங்குகள் உணவாகவும் பயன்படுத்தி விட்டன. இதனால் அப்பகுதியில் நடவு செய்யப்பட்ட அனைத்து மரக்கன்றுகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மரக்கன்றுகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் களமிறங்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பசுமை தினத்தன்று நடவு பராமரிக்கப்படாததால் மரக்கன்றுகள் அழியும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Green Day ,Ooty ,National Green Day ,Day ,Dinakaran ,
× RELATED ஊட்டி மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில்...