×

சோளம் அறுவடை பணிகள் மும்முரம்

 

அரூர், நவ.4: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை மற்றும் கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதியில் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட சிறுதானிய வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். உணவுக்காக மட்டுமின்றி, மாட்டு தீவனத்திற்காகவும் சிவப்பு சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 2 மாத பயிரான சோளம் தற்போது விளைச்சலுக்கு வந்துள்ளது. கம்பைநல்லூர் பகுதியில் அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சோளத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், சிவப்பு சோளம் சிறுதானிய வகைகளில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. சர்க்கரை நோயாளிகளின் சாப்பாடு பட்டியலில் கம்புக்கு அடுத்த இடத்தில் சிவப்பு சோளத்திற்கு முக்கிய இடமுண்டு. சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. பயிரிட்டு 2 மாதத்தில் மகசூலுக்கு வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது,’ என்றனர்.

 

The post சோளம் அறுவடை பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dharmapuri district ,Dharmapuri ,Gopinathampatti Kootrodu ,Morapur ,Kadoor ,Bommidi ,Paprirettipatti ,Theerthamalai ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்