×

திருமயம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை

 

திருமயம்,நவ.4: திருமயம் அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவரிடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வட்டார வள மையத்தில் நேற்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினர்.

மேலும் வட்டார வள மையத்திற்கு சென்று அலுவலர்களின் வருகை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  இதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளியில் ஒருபுறம் சுற்றுச்சுவர் இல்லாததை அறிந்த அமைச்சர் பொய்யாமொழி திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், கோட்டையூர் ஊராட்சி துணைத் தலைவர் மங்கள ராமன், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

The post திருமயம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirumayam Government Primary School ,Thirumayam ,Minister ,Mahesh ,Panchayat ,Tirumayam Government Primary School ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதியில்...