×

சுற்றுலா மற்றும் துணைத்தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சென்னை, சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், ‘‘சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சுற்றுலாத்துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணியாற்றிட வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில் செயலாளர் மணிவாசன், இயக்குநர் காகர்லா உஷா, பொதுமேலாளர் கமலா உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா மற்றும் துணைத்தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ramachandran ,CHENNAI ,TOURISM DEPARTMENT ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...