×

திருப்பதியில் டிச.23ல் சொர்க்கவாசல் திறப்பு

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் டிசம்பர் 23ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற டிசம்பர் 23ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக 2024ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அன்று இரவுடன் சொர்க்கவாசல் மூடப்படும் ’ என்றார்.

The post திருப்பதியில் டிச.23ல் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sorkkavasal ,Tirupati ,Tirumala ,Vaikunda Ekadasi ,Tirupati Devasthanam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...