×

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவள்ளி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஜெபகுமாரி அனி, பயிர் காப்பீடு உதவி இயக்குநர் அனிதா, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Agriculture Farmers' Welfare Department ,District Collector ,Office ,Dinakaran ,
× RELATED நெகிழி, மீண்டும் மஞ்சப்பை குறித்து...