×

கோவை வஉசி உயிரியல் பூங்கா பறவை, விலங்குகள் வண்டலூருக்கு இடமாற்றம்

கோவை: கோவை வஉசி பூஙகாவில் இருந்த பறவை மற்றும் விலங்குகள் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இன்று இடமாற்றம் செய்யப்பட்டது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது உயிரியல் பூங்காவில் இருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன.

இங்குள்ள விலங்குகள், பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்காக இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அதனை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். மேலும், இன்று பாம்புகள், முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவை உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து வஉசி உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணன் கூறுகையில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் 2022-ம் ஆண்டு போதிய இடவசதி இல்லாததால் கோவை வஉசி உயிரியல் பூங்கா உரிமத்தை ரத்து செய்தது. இதனால் இங்குள்ள விலங்குகளை வண்டலூர், சத்தியமங்கலம், வேலூருக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பாம்புகள், குரங்குகள், முதலை மற்றும் ரோஸ் பெலிகான் பறவையை கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது. இவ்வாறு சரவணன் கூறினார்.

The post கோவை வஉசி உயிரியல் பூங்கா பறவை, விலங்குகள் வண்டலூருக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vausi ,Zoo ,Vandalur ,Vausi Park ,Vandalur Park ,Chennai ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது