×

தேசியவாத காங்.எம்பி தகுதி நீக்கம் ரத்து

புதுடெல்லி: கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதன் பின் மீண்டும் எம்பியானார். அப்பீல் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவர் மீதான தண்டனையை ரத்து செய்ய மறுத்தது.

அக்டோபர் 4ம் தேதி மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. அவருக்கு எதிரான தகுதி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது.

The post தேசியவாத காங்.எம்பி தகுதி நீக்கம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,New Delhi ,Lakshadweep ,Mohammad Faisal ,Dinakaran ,
× RELATED அஜித் பவாருக்கு கட்சி ஒதுக்கிய...