- தேர்தல் ஆணையம்
- சரத் பவார்
- மும்பை
- தேசியவாத காங்கிரஸ்
- மகாராஷ்டிரா
- அஜித் பவார்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- தின மலர்
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் பிரிந்தபோது, அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்த தேர்தல் ஆணையம், தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தையும் அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியது. பின்னர் சரத் பவார் தலைமையிலான அணியிணை சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் என அறிவித்த தேர்தல் ஆணையம், அவர்களுக்கு கொம்பு ஊதும் மனிதன் சின்னத்தை ஒதுக்கியது. அத்துடன் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு கொம்பு சின்னத்தை ஒதுக்கியது. இது மக்களவை தேர்தலில் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் அணியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே, “மக்களவை தேர்தலில் சரத் பவார் அணிக்கு கொம்பு ஊதும் மனிதன் சின்னமும், சுயேட்சை வேட்பாளருக்கு கொம்பு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதுபோன்ற ஒரே மாதிரியான சின்னம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் ஏற்படுத்தியது. அதனால் வரும் பேரவை தேர்தலில் சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் கவனமுடன் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
The post வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும்: சரத் பவார் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.