×

வேதாரண்யம் சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் யானைகட்டு தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் வந்த நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் 5 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சார் பதிவாளர் பாபு, பத்திரப்பதிவு எழுத்தர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 3 மணி வரை என 9 மணி நேரம் சோதனை நடந்தது.

The post வேதாரண்யம் சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Sir ,Office Raid ,Vedaranyam ,Vedaranyam Yanaiktu Street, Nagapattinam District ,Babu ,Vedaranyam Sir Registrar's Office Reid ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில்...