×

ஹாட்ரிக் தோல்வியால் சிக்கலில் நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருக்கு…

புனே: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்தை 190 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்ரிக்கா 6வது வெற்றியுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. வெற்றிக்கு பின் கேப்டன் பவுமா கூறியதாவது: “எங்கள் பேட்டிங், பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. டிகாக் மெதுவாக தொடங்கினாலும், அந்த துவக்கத்தை பெரிய ரன்களாக மாற்றினார். நாங்கள் முதல் 30 ஓவர் பொறுமையாக ஆடி பின்னர் தாக்குதல் ஆட்டம் என்பதுதான் திட்டமாக வைத்திருந்தோம், என்றார். நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், “இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது.

ஆரம்பத்திலேயே 5 விக்கெட் இழந்தது பெரிய ஏமாற்றமாகஇருந்தது. இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் நான் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்திருக்க மாட்டேன். இது ஒரு சராசரியான ஆடுகளம். எதிரணியை 340 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும், என்றார். ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் தென்ஆப்ரிக்கா, இந்தியா அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா அடுத்ததாக நாளை மறுநாள் இங்கிலாந்து, 7ம் தேதி ஆப்கன், 11ம்தேதி வங்கதேசத்துடன் மோத உள்ளது.

இதில் 2ல் வென்றால் போதும். ஆனால் மற்றொரு இடத்திற்கு பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை மறுநாள் பெங்களூருவில் நியூசிலாந்து-பாகிஸ்தான் மோத உள்ளன. இது இரு அணிக்கும் வாழ்வா, சாவா மோதலாக இருக்கும். இதில் வென்று கடைசி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெறும். இதேபோல் நியூசிலாந்து, பாகிஸ்தானையும் கடைசி போட்டியில் இலங்கையையும் வென்றால் வாய்ப்பு கிடைக்கும். இனி வரும் போட்டிகள் மீது பெரிதும் எதிர்பார்ப்பு உள்ளதால் உலக கோப்பை சூடுபிடிக்கத்தொடங்கி உள்ளது.

The post ஹாட்ரிக் தோல்வியால் சிக்கலில் நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருக்கு… appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Pakistan ,Pune ,South Africa ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…