×

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு, பதிவு மூப்பின் அடிப்படையில் நேரடியாக பணி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு, பதிவு மூப்பின் அடிப்படையில் நேரடியாக பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்திடுவதற்காக ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப்பட்டு பெறப்பட்டுள்ளது என்று செய்தி வருகிறது. மாநகர் போக்குவரத்து கழங்களில் முறையாக பயிற்சியும் சான்றிதழும் பெற்றிருந்தும் “இந்திய சாலை போக்குவரத்து” நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கும் ஓட்டுனர்கள் தான் பேருந்தை இயக்கி வருகிறார்கள்.

தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் மாநகர போக்குவரத்தைதான் பயன்படுத்துகிறார்கள். உரிய பயிற்சியும், சான்றிதழும் பெற்று அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு நேரிடையாக நிரந்தரப் பணி வழங்க வேண்டும். பல காத்திருப்பவர்களுக்கு ஆண்டுகாலமாக இதனால் வேலைக்கு அவர்களின் பதிவு வாழ்வாதாரம் செய்து எதிர்பார்ப்புடன் காக்கப்படும். மேலும் வேலைவாய்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். ஓப்பந்த நிறுவனங்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டால் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணிக்கும் பேருந்து பயணம், பாதுகாப்பு என்பது மிக முக்கியம். பயிற்சி பெற்ற முன் அனுபவம் உள்ள ஓட்டுனர்களுக்கு, நடத்துனர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு, பதிவு மூப்பின் அடிப்படையில் நேரடியாக பணி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,GK Vasan ,Chennai ,Tamil ,State Congress ,
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் ஜி.கே.வாசன்...