×

மூதாட்டி தற்கொலை

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் இரணியன் வீதியை சேர்ந்த கணேசன் மனைவி பாக்கியம் (60). இவர், கடந்த 2 வருடமாக சிறுநீரக பிரச்னையால் வயிறு வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த 30ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்த பாக்கியம், வீட்டின் படுக்கை அறையில் உள்ள பாத்ரூமிற்கு சென்று, அங்கு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிசசைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பாக்கியம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, பாக்கியம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Ganesan ,Bhakyam ,Erode Rangampalayam ,Satya Nagar ,road ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்