×

சில்லி பாயிண்ட்..

* புள்ளி பட்டியல்

* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிராக நடக்க உள்ள லீக் ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. நெதர்லாந்துடன் நவ.12ம் தேதி நடக்க உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தென் ஆப்ரிக்க அணியுடன் புனேவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தின்போது, 27வது ஓவரில் 3 பந்துகளை வீசியிருந்த நிலையில் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி காயம் அடைந்தார். தசைநார் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பின்னரும் அவரால் களத்துக்கு திரும்பி பந்துவீச்சை தொடர முடியவில்லை. ஏற்கனவே லோக்கி பெர்குசன், மார்க் சாப்மேன், கேன் வில்லியம்சன் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹென்றியும் காயம் அடைந்திருப்பது நியூசி. அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

* டெல்லி, மும்பை நகரங்களில் காற்று மாசு பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு நடைபெறும் உலக கோப்பை போட்டிகளின்போது பட்டாசுகளை வெடிக்க கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

The post சில்லி பாயிண்ட்.. appeared first on Dinakaran.

Tags : Hardik Pandya ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!