×

விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை: வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 15ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் ரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற ரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிக்கு பின் வரும் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும்.

பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஸ்ரேயா, தலைமைப் பொறியாளர் முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Minister of Agriculture and Farmers' Welfare ,M.R.K. Panneerselvam ,Dinakaran ,
× RELATED அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...