×

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடி கருக்கா வினோத் மீண்டும் சிறையிலடைப்பு: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிண்டிஆளுநர் மாளிகை அருகே, கடந்த 24ம் தேதி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 9 குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்(42) என்பவர், ‘நீட் மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து’ 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்து கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ‘நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி கொடுக்காததால், தனது மகன் எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க முடியாமல் போகும் என்பதால் பெட்ரோல் குண்டுகள் வீசியதாக’ போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அதைதொடர்ந்து போலீசார், 3 நாள் விசாரணைக்கு பிறகு நேற்று பிற்பகல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, ரவுடி கருக்கா வினோத்தை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை நேற்று மாலை மருத்துவ பரிசோதனை முடிந்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடி கருக்கா வினோத் மீண்டும் சிறையிலடைப்பு: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Garukka Vinod ,Governor's House ,Saidapet ,Chennai ,SM Nagar ,Tenampet ,Kindi Governor's House ,
× RELATED அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்