×

கடற்கரை- தாம்பரம் இடையே 5 மணிநேரம் மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி: பஸ் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கமாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று காலை 10.45 மணி முதல் மதியம் 3.45 மணி (5 மணி நேரம்) ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, தாம்பரம் – கடற்கரை இடையே நேற்று காலை 9.08, 9.50, 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40 மற்றும் மதியம் 12.05, 12.35, 1.00, 1.30, 1.40, 2.5, 2.20, 2.50, 2.57 மற்றும் 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. மறுமார்க்கமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நேற்று காலை 10.18, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50 மற்றும் 12.00, 12.10, 12.30, 1.15, 1.30, 2.00, 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், கடற்கரை – செங்கல்பட்டு இடையே நேற்று காலை 10.56, 11.40 மற்றும் மதியம் 12.20, 12.40, 1,45, 2.15, 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கமாக செங்கல்பட்டு – கடற்கரை இடையே நேற்று காலை 11.00, 11.30 மற்றும் மதி யம் 12.00, 1.00, 1.45, 2.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. நேற்று சுமார் 5 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு படையெடுத்தனர். குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் அதில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒருவரை ஒருவர் இடித்தபடி நின்று கொண்டே சென்றனர். இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரும்புலியூர் பகுதி வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* 3 நாட்களுக்கு ரயில்கள் ரத்து

பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று (31ம் ேததி) முதல் 3 நாட்களுக்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் வரும் 3ம்தேதி வரை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 மணி முதல் 11.55 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கடற்கரை- தாம்பரம் இடையே 5 மணிநேரம் மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி: பஸ் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Beach-Thambaram ,Chennai ,Chennai Beach – Tambaram – ,Chengalpattu ,Beach ,Tambaram ,
× RELATED சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி...