×

திருத்தணி கோட்டத்தில் கால்நடை சிறப்பு முகாம்: உதவி இயக்குனர் தகவல்

திருத்தணி: திருத்தணி கோட்டத்தில் வரும் 4ம் தேதி முதல் 15 இடங்களில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என திருத்தணி கால்நடை பராமரிப்பு துறையின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். திருத்தணி கால்நடை பராமரிப்பு துறையின் உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவலாங்காடு ஆகிய 4 ஒன்றியங்களில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம், மொத்தம் 15 இடங்களில் வரும் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம், மலட்டுத் தன்மை சிகிச்சை, சினை பரிசோதனை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. வரும் 4ம் தேதி அய்யனேரி, ஸ்ரீகாளிகாபுரத்திலும், 9ம் தேதி தாடூர் காலனியிலும், 15ம் தேதி கொத்தகுப்பம், கோணசமுத்திரத்திலும், 17ம் தேதி ராமச்சந்திராபுரம், வி.சி.ஆர்.கண்டிகையிலும், 18ம் தேதி அரிச்சந்திராபுரம், லட்சுமிவிலாசபுரத்திலும், 20ம் தேதி கோபாலபுரம், எஸ்.கே.வி.கண்டிகையிலும், 24ம் தேதி பட்டாபிராமபுரம், அகூர் காலனியிலும், 28ம் தேதி ஸ்ரீகாவேரிராஜிலிங்கபேட்டை, சாமந்தவாடாவிலும் என மொத்தம், 15 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். மொத்தம் 15 இடங்களில் வரும் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை இம்முகாம் நடக்கிறது.

The post திருத்தணி கோட்டத்தில் கால்நடை சிறப்பு முகாம்: உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Livestock ,Special ,Camp ,Tiruthani Division ,Tiruthani ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...