×

ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கம் இந்தாண்டு 204 போலீஸ் அதிகாரிகள் தேர்வு

புதுடெல்லி: நடப்பு 2023ம் ஆண்டு, சிறப்பு செயல்பாடுகளுக்கான ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த 204 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் கடந்த 2018ல் உருவாக்கப்பட்டது. பதக்கம் பெறுபவர்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் அக் 31ம் தேதி அறிவிப்பு செய்யப்படும். ஒரு ஆண்டில் 3 செயல்பாடுகள் விருதுக்காக பரிந்துரை செய்யப்படும்.

சில அசாதாரண சூழல்களில் காவல்துறையை ஊக்குவிக்க 5 சிறப்பு நடவடிக்கை விருதுகள் அளிக்கப்படும். நடப்பாண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., தெலங்கானா, திரிபுரா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஆர்.எப்., தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட 204 பேருக்கு பதக்கம் அளிக்கப்பட உள்ளது. மணிப்பூர் டி.ஜி.பி ராஜீவ் சிங், காஷ்மீரில் பணியாற்றிய சி.ஆர்.பி.எப் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி அமித் குமார் ஆகியோர் விருது பட்டியலில் உள்ளனர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கம் இந்தாண்டு 204 போலீஸ் அதிகாரிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Tamil Nadu ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு