×

திமுக பாக முகவர்கள் கூட்டம்

 

கோத்தகிரி, அக்.31: கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் அண்ணன் மூ.பொன்தோஸ் முன்னிலை வகித்தார். இதில், திமுக கழகம் சார்ந்த பல்வேறு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவரும், நீலகிரி ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளருமான ராம்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளரும், தேனாடு ஊராட்சி தலைவருமான ஆல்வின், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய துணைச்செயலாளர்கள் காரி ருக்குமணி, மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், ராம்கோபால்,சுண்டட்டி முருகன் மற்றும் அனைத்து பாக முகவர்களும் கலந்து கொண்டனர்.

The post திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kotagiri ,Kilgotagiri ,Union ,Nilgiri District Kilgothagiri Union ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை