×

பல்லடம் நகராட்சியில் 8 பள்ளிகளில் கழிப்பிடம் கட்ட ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு

 

பல்லடம்: பல்லடம் நகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் கழிப்பிடம் கட்ட ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லடம் நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமார், சுகாதார அலுவலர் செந்தில்குமார்,நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்திய சுந்தர்ராஜ், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, வருவாய் ஆய்வாளர் நந்தினி பாக்கியராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அண்ணா நகர், கொசவம்பாளையம், கல்லம்பாளையம், சேடபாளையம், பி.டி.ஒ.காலனி, ராயர்பாளையம், பல்லடம் கிழக்கு, பல்லடம் மேற்கு ஆகிய 8 நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் ரூ.80 லட்சம் மதிப்பில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நலன் கருதி நவீன கழிப்பிடம் கட்டப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பல்லடம் நகராட்சியில் 8 பள்ளிகளில் கழிப்பிடம் கட்ட ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Palladam Municipality ,Palladam ,Municipality ,Dinakaran ,
× RELATED பிரதமர் வருகையை கண்டித்து பலூன்...