×

சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை குடியாத்தத்தை சேர்ந்தவர் விடுப்பு வழங்காததால் மனஉளைச்சல்

குடியாத்தம் அக்.30: விடுப்பு வழங்காததால் குடியாத்தத்தை சேர்ந்த சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ேவலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சந்திரனின் மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சந்திரன் தனது மகளை பார்ப்பதற்காக விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தாராம். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் நேற்று அவர் பணி செய்து வந்த இடத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் குணசேகரின் மனைவி வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை குடியாத்தத்தை சேர்ந்தவர் விடுப்பு வழங்காததால் மனஉளைச்சல் appeared first on Dinakaran.

Tags : CRPF ,Kudiatham ,Yevalur district… ,Dinakaran ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்