×

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் இன்று ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் செயின்ட் தாமஸ் பகுதியில் இன்று காலை 10.45 மணி முதல் மதியம் 3.45 மணி (5 மணி நேரம்) ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை 10.18, 10.30, 10.36, 10.46, 10.56, 11.6, 11.14, 11.22, 11.30, 11.50 மற்றும் 12.00, 12.10, 12.30, 1.15, 1.30, 2.00, 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இன்று காலை 9.8, 9.50, 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40 மற்றும் மதியம் 12.5, 12.35, 1.00, 1.30, 1.40, 2.5, 2.20, 2.50, 2.57 மற்றும் 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல், கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று காலை 10.56, 11.40 மற்றும் மதியம் 12.20, 12.40, 1,45, 2.15, 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டு -கடற்கரை இடையே இன்று காலை 11.00, 11.30 மற்றும் மதியம் 12.00, 1.00, 1.45, 2.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருமால்பூர் – கடற்கரை இடையே காலை 11.5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காலை 10 மணிக்கு செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் – கடற்கரை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Tambaram ,CHENNAI ,Southern Railway ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே...