×

உலக கோப்பையில்: கொல்கத்தா ஈடன் கார்டனில்…

* உலக கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 2 முறை தான் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளன.

* இங்கிலாந்தில் 1999ம் ஆண்டு நடந்த உலக கோப்பை பி பிரிவு ஆட்டத்தில் வங்கம் 62ரன் வித்தியாசத்தில் வாகை சூடியது.

* அதே இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாக் 94ரன் வித்தியாசத்தில் வென்றது.

* நடப்பு உலக கோப்பையில் முதல் 2 ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான், அடுத்த 3 ஆட்டங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா என 4 அணிகளிடம் தோல்வி அடைந்தது.

* வங்கதேசம் இதுவரை ஆடிய ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானை சாய்த்தது. அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து அணிகளிடம் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

* ஈடன் கார்டனில் இதுவரை நடந்த 32 ஒருநாள் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 18 ஆட்டங்களிலும், 2வது பேட்டிங் செய்த அணிகள் 12ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

* பாகிஸ்தான் இங்கு 6 ஆட்டங்களிலும், வங்கதேசம் 2 ஆட்டங்களிலும் விளையாடி உள்ளன.

* பாக் இங்கு விளையாடிய 6 ஆட்டங்களில் இந்தியாவை 4 முறையும், மேற்கு இந்தியாவை ஒருமுறையும் வீழ்த்தி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இடையில் ஒரு ஆட்டத்தில் மட்டும் இலங்கையிடம் 85ரன் வித்தியாசத்தில் தோற்று உள்ளது.

* வங்கம் இங்கு விளையாடிய 2 ஆட்டங்களில் ஒன்றில் இலங்கையிடம் 71ரன் வித்தியாசத்திலும், மற்றொன்றில் 2 நாட்களுக்கு முன்பு நெதர்லாந்திடம் 87ரன் வித்தியாசத்திலும் தோற்றது.

The post உலக கோப்பையில்: கொல்கத்தா ஈடன் கார்டனில்… appeared first on Dinakaran.

Tags : World Cup ,Kolkata ,Eden Gardens… ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்