×

ஆட்சியை கவிழ்க்க காங். எம்எல்ஏக்களிடம் பேரம் பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ கர்நாடகாவில் தோல்வி அடையும்: முதல்வர் சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தோல்வி அடையும். பாஜவின் சதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிக்கமாட்டார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ சதி செய்துவருவதாக காங்கிரஸ் ஆட்சியமைத்ததில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜ முயற்சித்துவருவதாக பேசப்பட்டுவந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக நானும் கேள்விப்பட்டேன். பாஜவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. பாஜவின் சதியில் எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும் சிக்கமாட்டார்கள்’ என்றார்.

இதுதொடர்பாக டிவீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், ‘டெல்லி மேலிடத்தின் மேற்பார்வையின் கீழ், கர்நாடக பாஜ தலைவர்கள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியின் உண்மையான விசுவாசிகள். கர்நாடகாவில் உத்தரவாத திட்டங்களை உடனடியாக செயல்படுத்திய காங்கிரஸ் அரசு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. முதலில் பாஜ, கட்சியின் மாநில தலைவரை நியமிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஆட்சியை கவிழ்க்க காங். எம்எல்ஏக்களிடம் பேரம் பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ கர்நாடகாவில் தோல்வி அடையும்: முதல்வர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kong ,BJP ,CM Siddaramaiah ,Bengaluru ,Congress government ,Karnataka ,Congress ,BaramBaj ,Chief Minister ,Siddaramaiah ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...