×

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு

சென்னை: 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 5 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி எஸ்பியாக இருந்த பிருந்தா, எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உதவி எஸ்பியாக இருந்த ஐமன் ஜமால், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த கவுதம் கோயல், பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும், ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த பாஸ்கரன், மதுரை 4வது சிறப்பு பட்டாலியன் கமாண்டன்டாகவும், வெளிநாட்டு படிப்புக்காக சென்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள சுகுணா சிங், ரயில்வே எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Amutha ,CHENNAI ,Home ,Amuda ,Dinakaran ,
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல்...