×

“முதல்வரின் முகவரி” திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு

சென்னை: முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.,க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலரான அமுதா ஐ.ஏ.எஸ் க்கு தற்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி மற்றும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.,க்கு இரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு உள்துறைச் செயலராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்த உடன், முதல்வரின் முகவரி என்ற திட்டம் துவங்கப்பட்டது. இதில் முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த புதிய துறை ஆரம்பிக்கப்பட்டது. இந்த துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

 

 

The post “முதல்வரின் முகவரி” திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amutha IAS ,Government of Tamil Nadu ,Chennai ,Amuta ,Dinakaran ,
× RELATED சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை