×

நாங்குநேரி யூனியன் புதிய அலுவலக கட்டுமான பணி

நெல்லை,அக்.28: நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணியை நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌம்யா ஆரோக்கிய எட்வின் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர்களை அழைத்து பணியை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் வளாகத்தில் உள்ள நர்சரி தோட்டத்தில் புதிய மூலிகை மரங்களை நட்டினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின், தளபதிசமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் ஜெபகனி செந்தில்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யமுனா மற்றும் ராஜேஸ்வரன், பொறியாளர் பாக்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

The post நாங்குநேரி யூனியன் புதிய அலுவலக கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Nanguneri Union ,Nella ,Nanguneri Orati Union ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...