முத்துப்பேட்டை: சென்னை அம்பத்தூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற காவலர் ரகுபதி என்பவரை வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, மருதங்காவெளி காவலர்கள் குடியிருப்பு எதிர்புறம் காலனி வீடுகள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனகூறிஅதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் நேற்று அங்கு திரண்டு முழக்கமிட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தி, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கலைந்துபோக செய்தனர்.
The post முத்துப்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.
