×

வட மாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை தேவை: சீமான் வலியுறுத்தல்

சென்னை: வட மாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை தேவை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் செயல் நடக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தங்கும் இடம், பணிபுரியும் நிறுவனம் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை தேவை என்று சீமான் கேட்டு கொண்டுள்ளார்.

The post வட மாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை தேவை: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : north state ,Seaman ,CHENNAI ,Tamilar Party ,Dinakaran ,
× RELATED குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம்...