- அஇஅதிமுக
- அண்ணாமலை
- கடம்பூர் ராஜு
- சட்டமன்ற உறுப்பினர்
- Kattam
- கோவில்பட்டி
- கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
- பாஜக
- ஜனாதிபதி
- Kadampur
- ராஜு
![]()
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்துத்தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம், 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.
1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா. அன்றைக்கு அவர் இல்லை. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜவுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை. யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணாமலையை பார்த்து அதிமுகதான் சிரிக்கிறது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ காட்டம் appeared first on Dinakaran.
