×

தருமபுரம் சென்றபோது ஆளுநர் கற்களாலும் தடியாலும் தாக்கப்பட்டார் என ஆளுநர் மாளிகை சொல்வது பொய்: டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: தருமபுரம் சென்றபோது ஆளுநர் கற்களாலும் தடியாலும் தாக்கப்பட்டார் என ஆளுநர் மாளிகை சொல்வது பொய் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநர் தாக்கப்பட்டதாக கூறியதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தருமபுரம் சென்றபோது ஆளுநர் கற்களாலும் தடிகளாலும் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. தருமபுரத்துக்கு ஆளுநர் சென்றபோது எடுத்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தருமபுரம் சம்பவம் தொடர்பாக புகார் பதிவு செய்யப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை கூறுவது தவறு எனவும் டிஜிபி கூறியுள்ளார்.

The post தருமபுரம் சென்றபோது ஆளுநர் கற்களாலும் தடியாலும் தாக்கப்பட்டார் என ஆளுநர் மாளிகை சொல்வது பொய்: டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Governor ,Dharumapuram ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Shankar ,
× RELATED அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்