×

சாம்பியன் இந்தியா ஆடும் சுல்தான் கோப்பை ஹாக்கி

ஜோகூர் பாரு: நடப்பு சாம்பியன் இந்திய ஆடவர் அணி உட்பட 8 அணிகள் பங்கேற்கும் சர்வதேச 11வது ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் ஏ, பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ-பிரிவில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரேட் பிரிட்டன் அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்தியா உள்ள பி-பிரிவில் போட்டியை நடத்தும் மலேசியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இருக்கின்றன.

இன்று தொடங்கும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஏ- பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் அக்.31ம் தேதியுடன் முடிகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும். அரையிறுதி ஆட்டங்கள் நவ.3ம் தேதி நடக்கும். இறுதி ஆட்டம் நவ.4ம் தேதி நடைபெற உள்ளது.

 

The post சாம்பியன் இந்தியா ஆடும் சுல்தான் கோப்பை ஹாக்கி appeared first on Dinakaran.

Tags : Cup ,India ,Johor Bahru ,International Johor Sultan ,Sultan Cup ,Dinakaran ,
× RELATED வாழைப்பழ அல்வா