×

ஆளுநர் மாளிகை புகாருக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் மாளிகை முதன்மை நுழைவாயில் அருகில் சந்தேகப்படும் நிலையில் இருந்த கருக்கா வினோத் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் ஆளுநர் மாளிகை அதிகாரி, சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை வலிந்து திணித்திருப்பதை ஏற்க இயலாது. ஆளுநர் மாளிகை அதிகாரியின் புகார் “திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களது சமூக ஊடகங்களிலும் அச்சுறுத்தப்படுவதாக” புனையப்பட்டுள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

The post ஆளுநர் மாளிகை புகாருக்கு முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Governor's ,House ,Chennai ,State Secretary of the ,Communist Party ,of ,India ,Governor's House ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...