×

ராமரை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்?: பாஜவுக்கு கபில்சிபல் கேள்வி

புதுடெல்லி: அரசியல் ஆதாயத்துக்காக ராமரை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள் என்று பாஜவிற்கு மாநிலங்களவை எம்பி கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி, அயோத்தியில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வருகின்றது. அடுத்த ராமநவமியின்போது ராமர் கோயிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமரின் கருத்துக்களை விமர்சிக்கும் வகையில், மாநிலங்களவை எம்பி கபில்சிபல் தனது டிவிட்டர் பதிவில்,\\” நீங்கள் எத்தனை முறை ராமரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவீர்கள்? ராமரின் நற்பண்புகளை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அவரது வீரம், விசுவாசம், இரக்கம், அன்பு, கீழ்படிதல், தைரியம் மற்றும் சமநிலை; உங்களது ஆட்சி இந்த நற்பண்புகளை எதையும் காட்டவில்லை.\\” என்றுகுறிப்பிட்டுள்ளார்.

The post ராமரை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்?: பாஜவுக்கு கபில்சிபல் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bajaj ,NEW DELHI ,CAPILCIBAL ,BAJA ,Dinakaran ,
× RELATED ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை பற்றி...