×

அரசு வேலைக்காக கவுன்சிலர் ராஜினாமா

புதுக்கோட்டை: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர், ஆணையர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் போது, 12வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் நர்மதா, தனது பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு அரசு பணி கிடைக்க இருப்பதாகவும், அதற்காக ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கப்பட்டது.

The post அரசு வேலைக்காக கவுன்சிலர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Thoothukudi Panchayat Union Committee ,Panchayat Union ,President ,Vasumathi Ambasankar ,
× RELATED விராலிமலை அருகே ஏர்கன் வைத்து வேட்டையாடியவர் கைது..!!